பரமசிவன் பாத்திமா – சினிமா விமர்சனம்

174 0

தென் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் மற்றும் யோக்கோபுரம் கிராமங்களில், பெயருக்கு ஏற்றார் போல், முறையே இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இரு கிராமங்களைச் சேர்ந்த விமலும் சாயா தேவியும் காதலிக்கிறார்கள். இதற்கு நடுவே பல கொலைச் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதனை செய்தது யார் என்பதும், ஊர் எதிர்ப்பை தாண்டி காதலர்கள் கரம் பிடித்தார்களா என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.

நடிகர் விமல் வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அனைத்து நவரச நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி சாயாதேவியும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் காவல்துறை அதிகாரியாக நடித்து கலக்கியிருக்கிறார். கோலிவுட்டிற்கு இன்னொரு குணச்சித்திர நடிகர் கிடைத்திருக்கிறார் என்றே கூறலாம்.

சர்ச் பாதிரியாராக எம்.எஸ் பாஸ்கர் கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மலை கிராமத்தின் அழகை அப்படியே கேமராவில் அழகாக அள்ளிக் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் கேமராமேன் சுகுமார். தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளோடு அற்புதமாக ஒன்றிப் போவது ரம்மியமாக உள்ளது.

மதத்தை விட மனிதநேயம் முக்கியம் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். முள் செடியில் மலர்ந்த ரோஜா போல, மத சர்ச்சை கதை பின்னணியில் நல்லதொரு படமாக வெளிவந்துள்ளது பரமசிவன் பாத்திமா.

– நிருபர் நாராயணன்

 

 

 

Related Post

பம்பர் – திரை விமர்சனம்

Posted by - July 5, 2023 0
நடிகர் வெற்றி, பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பம்பர்”. ஜாலி பேர்வழியான கதாநாயகன் சபரிமலை செல்லும் நிலையில், 10 கோடி பம்பர்…

“பபூன்” – திரை விமர்சனம்

Posted by - September 24, 2022 0
ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”. கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால்,…

தமிழ்க்குடிமகன் – சினிமா விமர்சனம்

Posted by - September 8, 2023 0
சலவை மற்றும் ஈமச்சடங்கு தொழில் செய்யும் சேரன், கிராம அதிகாரி ஆகும் ஆசையில் அரசுப் பணிக்கான தேர்வு எழுத தயாராகிறார். இதை ஆதிக்க சாதியினர் தடுக்க, அரசுத்…

அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை

Posted by - April 19, 2024 0
விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் முன்வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது: “ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் நல்லது செய்தால் என்னை போன்ற நடிகர்கள்…

மிஸஸ் & மிஸ்டர் – சினிமா விமர்சனம்

Posted by - July 13, 2025 0
‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். அம்மா, மகள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.