“குயிலி” இசை வெளியீட்டு விழா

202 0

BM பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “குயிலி”.

நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஒரு தாயின் வாழ்க்கை போராட்டத்தை, மண் சார்ந்த யதார்த்த கதையாக “குயிலி” படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விசிக தலைவர் திருமாவளவன் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட, பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் திருமாவளவன் பேசுகையில், இந்த படத்தில் வேட்டவலம் த. ராமமூர்த்தி எழுதிய பாடல் மிகச் சிறப்பாக உள்ளது. இது தமிழகம் முழுவதும் ஒலிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப்பொருள் நடமாட்டம் தற்போது கிராமங்கள் வரை ஊடுருவி இருப்பது கவலை அளிக்கிறது. இத்தகைய சூழலில் சமூக பொறுப்புடன் மதுக் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு திரைப்படம் எடுக்கும் தைரியம் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை மகிழச்சியுடன் பாராட்டுகிறேன். “குயிலி” திரைப்படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“குயிலி” படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

– நிருபர் நாராயணன்

Related Post

“படையாண்ட மாவீரா” படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - June 1, 2025 0
இயக்குநர் வ.கௌதமன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “படையாண்ட மாவீரா”. வி.கே. புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா…

லோகா சேப்டர் ஒன் சந்திரா – சினிமா விமர்சனம்

Posted by - August 31, 2025 0
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா வேடத்தில் வருகிறார். இரவில் மட்டும் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் யார், இவரது பின்னணி என்ன என்பதே “லோகா –…

கோவை சரளா எனது குரு: “செம்பி” இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

Posted by - October 28, 2022 0
“செம்பி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் கலர்ஃபுல்லாக நடைபெற்றது. கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை…

“அயோத்தி” – திரை விமர்சனம்

Posted by - March 3, 2023 0
“அயோத்தி” திரைப்படம் சசிகுமாரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல். அயோத்தி நகரில் இருந்து தென்னாட்டு புண்ணிய பூமி ராமேஸ்வரம் வருகிறது ஒரு இந்து குடும்பம். முரட்டுத்தனமான குடும்பத்…

மிஸஸ் & மிஸ்டர் – சினிமா விமர்சனம்

Posted by - July 13, 2025 0
‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். அம்மா, மகள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.