“படையாண்ட மாவீரா” படத்தின் இசை வெளியீட்டு விழா

247 0

யக்குநர் வ.கௌதமன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “படையாண்ட மாவீரா”.

வி.கே. புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் ஆடுகளம் நரேன், ஏ.எல். அழகப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

மக்களுக்காக போராடிய ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு “படையாண்ட மாவீரா” படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் காடுவெட்டி குரு. அப்படிப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தம்பி கௌதமன் “படையாண்ட மாவீரா” என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார். படம் வெற்றி பெற நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் என்றார்.

படத்தின் இயக்குநர் கெளதமன் பேசுகையில், படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரையுலகில் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினேன். அதன் விளைவு தான் “படையாண்ட மாவீரா” என்றார்.

– நிருபர் நாராயணன்

Related Post

நூறு சாமி – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2026 0
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது நூறு சாமி. கணவனை இழந்த சுவாசிகா, தனது மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தி இருவரையும் தனியொரு பெண்ணாக…

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’

Posted by - July 16, 2025 0
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி…

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீடு

Posted by - March 31, 2026 0
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின்…

ஒண்டிமுனியும் நல்லபாடனும் – சினிமா விமர்சனம்

Posted by - November 26, 2025 0
கொங்கு வட்டாரப் பின்னணியில் உருவாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” திரைப்படம். திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கியுள்ளார். “பரோட்டா” முருகேசன், கார்த்திகேசன்,…

‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Posted by - August 7, 2025 0
ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.