அந்தகன் – சினிமா விமர்சனம்

484 0

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் “அந்தகன்” மாறுபட்ட படைப்பாக வெளிவந்துள்ளது.

பார்வையில்லாத பியானோ இசைக் கலைஞராக வருகிறார் பிரசாந்த். அவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கு நடுவே, தங்கள் பிறந்தநாளன்று மனைவியை ஆச்சரியப்படுத்த நேரில் பியானோ வாசிக்க அழைப்பு விடுக்கிறார் கார்த்திக். அவர் வீட்டுக்குச் செல்லும்போது, அதிர்ச்சி சம்பவமாக இறந்து கிடக்கிறார் கார்த்திக்.

வீட்டில், போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியுடன் இருக்கிறார் சிம்ரன். அதன்பிறகு பிரசாந்த் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். அவர் அதிலிருந்து தப்பித்தாரா, கார்த்திக் ஏன் கொல்லப்பட்டார் போன்றவற்றுக்கான விடையை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பிரசாந்துக்கு இப்படம் பெரும் திருப்புமுனை படமாக அமைவது உறுதி. கூலிங் கிளாஸுடன் அற்புதமான நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். பல காட்சிகளில் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறார்.

தமிழ்ப்பெண் பிரியா ஆனந்த் அழகாகவும், கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கிறார். சிம்ரன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். யோகிபாபு, ஊர்வசி காமெடி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

ரவியாதவின் கேமராவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.

மிக விறுவிறுப்பான கதைநகர்வை நேர்த்தியாக திரையில் காட்டியுள்ளார் இயக்குநர் தியாகராஜன். ஹேட்ஸ் ஆஃப் சார்.

மொத்தத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான திரில்லர் படம். தாராளமாக தியேட்டருக்குச் சென்று ரசித்துப் பார்க்கலாம். ரசிகர்களுக்கு செம விருந்து…!

– நிருபர் நாராயணன்

Related Post

‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - July 1, 2025 0
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்…

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025 0
கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில்…

‘லவ் ஓ லவ்’ – சினிமா விமர்சனம்

Posted by - July 11, 2026 0
பவிஷ், நாக துர்கா நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது லவ் ஓ லவ் திரைப்படம். காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் வருமானத்தை…

ஃபேமிலி படம் – சினிமா விமர்சனம்

Posted by - December 6, 2024 0
செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், யுகே கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் இந்த குடும்பப் படம். ஆம், படத்தின் கதையை ஒரு குடும்பமாக தாங்கிப் பிடித்துள்ள படம்.…

பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

Posted by - September 2, 2023 0
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”. நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.