புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

521 0

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குநரான  மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும்  உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக  உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர், “எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக ‘Four சிக்னல்’ இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது

Related Post

“கட்ஸ்” இசை வெளியீட்டு விழா

Posted by - April 9, 2025 0
புதுமுக நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் கட்ஸ். சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாரயணன் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் கால்…

லெவன் – சினிமா விமர்சனம்

Posted by - May 15, 2025 0
இயக்குனர் லோகேஷ் அஜ்லஸ் இயக்கத்தில் பிரபல தெலங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிச்சிருக்கும் படம் தான் லெவன். ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்தன் வேடத்தில் வரும் நாயகன்…

டாடா – திரை விமர்சனம்

Posted by - February 11, 2023 0
பிக்பாஸ் புகழ் கவின் – பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள அழகான காதல், காமெடி கலந்த குடும்பப் படம் டாடா. கதாநாயகனும்…

‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Posted by - June 16, 2026 0
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில்…

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’

Posted by - July 16, 2025 0
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.