விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்

484 0

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது.

இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

Related Post

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” – சினிமா விமர்சனம்

Posted by - November 12, 2023 0
ஜிகர்தண்டாவுக்கு புகழ்பெற்ற மதுரையில் அரசியல் செல்வாக்கு மிகுந்த ரவுடி ஆலியஸ் சீசராக உலா வருகிறார் ராகவா லாரன்ஸ். ஒரு நிகழ்ச்சியில் அவரது நிறத்தை வைத்து கேலி பேசும்…

கட்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - June 11, 2025 0
ஜெயபாரதி ரங்கராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரங்கராஜ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் “கட்ஸ்”. கதாநாயகி நான்சி, காவலராக டெல்லி கணேஷ், நாயகனின் அம்மாவாக ஸ்ருதி நாராயணன், குணச்சித்திர…

“படையாண்ட மாவீரா” படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - June 1, 2025 0
இயக்குநர் வ.கௌதமன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “படையாண்ட மாவீரா”. வி.கே. புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

ஏப்ரல் 3-ம் தேதி “நீளிரா” திரைப்படம் வெளியீடு

Posted by - March 23, 2026 0
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.