கட்ஸ் – சினிமா விமர்சனம்

378 0

ஜெயபாரதி ரங்கராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரங்கராஜ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் “கட்ஸ்”.

கதாநாயகி நான்சி, காவலராக டெல்லி கணேஷ், நாயகனின் அம்மாவாக ஸ்ருதி நாராயணன், குணச்சித்திர வேடத்தில் சாய் தீனா, வில்லன் பிர்லா போஸ், பெண் காவலராக அறந்தாங்கி நிஷா உள்ளிட்டடோர் நடித்துள்ளனர்.

ரங்கராஜ் புதுமுகம் என்றாலும் அது தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என கலக்கியிருக்கிறார். அதிலும், தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் ரங்கராஜ்.

கதாநாயகனுக்குப் போட்டியாக காதல், கொஞ்சல் என அழகுப் பதுமையாக நடித்திருக்கிறார் கதாநாயகி நான்சி.

சின்னத்திரை ஸ்ருதி நாராயணன் இதன் மூலம பெரிய திரையில் களமிறங்கியிருக்கிறார். நடிப்புத் திறமையை காட்டியிருக்கிறார். இதுபோல், சின்னத்திரை காமெடி குயின் அறந்தாங்கி நிஷா தனது பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.

மனோஜ் கேமராவை கையாள அதற்கேற்ப அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் ஜோஸ் ப்ராங்க்ளின். அனைத்துப் பாடல்களும் கேட்கும்படி உள்ளன. குறிப்பாக அம்மா பாடல் மனதை உருகச் செய்துள்ளது.

வேளாண்மையின் சிறப்பு, மூன்றாம் பாலரின் நலன்கள் என சமூகப் பார்வை கொண்ட படமாக வெளிவந்திருக்கிறது “கட்ஸ்”.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப, கமர்சியல் அம்சங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது படம். தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

‘காலங்களில் அவள் வசந்தம்’ – இசை வெளியீட்டு விழா

Posted by - October 17, 2022 0
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதலை ஒரு மாறுபட்ட…

லோகா சேப்டர் ஒன் சந்திரா – சினிமா விமர்சனம்

Posted by - August 31, 2025 0
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா வேடத்தில் வருகிறார். இரவில் மட்டும் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் யார், இவரது பின்னணி என்ன என்பதே “லோகா –…

அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

Posted by - September 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்…

‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

Posted by - October 11, 2025 0
சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.