சாலா – சினிமா விமர்சனம்

410 0

ணிபால் இயக்கத்தில், தீரன் ஸ்ரீ நட்ராஜ் கதாநாயகனாகவும், ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் சாலா.

சென்னை ராயபுரத்தில் மதுபான பார் ஒன்றை ஏலம் எடுப்பது தொடர்பாக இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த மோதலில், அருள்தாஸ் கும்பலுக்கு ஆதரவாக நமது ஹீரோ தீரன் களமிறங்குகிறார். அதேநேரத்தில், மதுஒழிப்பு பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளார் ஹீரோயின் ரேஷ்மா. இவர்கள் இடையே முதலில் மோதல்… அப்புறம் காதல்…!

மதுபான பார் யார் வசம் சென்றது, ரேஷ்மாவின் போராட்டம் வென்றதா, தீரனின் காதல் கைகூடியதா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

உலகத் தரத்தில் தமிழ்ப் படங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில், தீரன் தனது நடிப்பிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரசிகர்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கும் காலம் இது…! எனினும், நாயகனின் கட்டுமஸ்தான உடல் ஆக்சன் காட்சிகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

ஆசிரியை வேடத்தில் வரும் ரேஷ்மா அளவான, அழகான நடிப்பை தந்திருக்கிறார். இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர பிரகாசமான வாய்ப்பிருக்கிறது.

ரவுடி வேடத்தில் வரும் அருள்தாஸ் தனது கச்சிதமான நடிப்பால் பளிச் என ஜொலிக்கிறார்.

தீசனின் இசை ஜாலமும், ரவீந்திரநாத் குருவின் கேமரா விளையாடலும் “சாலா” என்னும் ரயிலுக்கு இரு தண்டவாளமாக இருந்து உதவி புரிந்திருக்கிறது.

இப்படத்தின் மூலம் மதுஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நல்லதொரு கருத்துடன் நேர்த்தியாக கதையை நகர்த்தியிருக்கிறார் டைரக்டர் மணிபால்.

சாலாவுக்கு சலோ…!

– நிருபர் நாராயணன்

Related Post

ஜிகிரி தோஸ்த் – சினிமா விமர்சனம்

Posted by - December 25, 2023 0
காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின்…

‘காலங்களில் அவள் வசந்தம்’ – இசை வெளியீட்டு விழா

Posted by - October 17, 2022 0
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதலை ஒரு மாறுபட்ட…

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீடு

Posted by - March 31, 2026 0
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின்…

டார்க் – சினிமா விமர்சனம்

Posted by - July 3, 2026 0
ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு,…

பீஸ்ட் – திரைப்பட விமர்சனம்

Posted by - April 14, 2022 0
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள படம் பீஸ்ட். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே இயக்குநர் நெல்சன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.