டார்க் – சினிமா விமர்சனம்

22 0

ரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். ஊர் மக்கள் இதை ‘பேய் வீடு’ என்கிறார்கள்.

குறைந்த வாடகை என்பதால், அந்தவீடு பற்றிய உண்மை தெரிந்தும் குடியேறுகிறார் நாயகன் அஜய் கார்த்திக். அவரும் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு இறக்கிறார். வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் இறக்கிறார்.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அதில் எல்லாக் கேள்விகளுக்கும் திடுக்கிடும் விடை தெரிகிறது. இதுதான் டார்க் படத்தின் திரைக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்த், கடன் சுமையால் தவிக்கும் இளைஞராகவும், அமானுஷ்ய சக்தியின் தாக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மனிதராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பயம், குழப்பம், பதற்றம் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜோவிதா லிவிங்ஸ்டன் குடும்ப பெண்ணாக கதைக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அருவி மதன், சோனியா அகர்வால் ஆகியோர் குறைவான காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்கள். அமுதவாணன், ரபிக் பாட்ஷா, கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அஞ்சனா நேத்ரனுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நிறைவாக இருக்கிறார். படத்தில் அதிக கதாபாத்திரங்கள் இல்லை. கே. பாக்கியராஜ் மற்றும் அஜய் கார்த்தி ஆகிய இருவரையும் வைத்தே இயக்குநர் கதையை நகர்த்தியுள்ளார்.

படத்தின் முதல் பத்து நிமிடங்களில் நடக்கும் கொலைக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகின்றன. படம் முடியும் வரை அந்தப் பய உணர்வைத் தக்கவைப்பதில் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் வெற்றி பெற்றுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால், திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை பல காட்சிகளில் பயத்தை அதிகரிக்கிறது.

திகில் படத்தை திகில் படமாகவே கொடுத்திருக்கிறார்கள். கதை நகரும் விதம், தொழில்நுட்பத் திறன் மற்றும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்புக்காக ‘டார்க்’ திரைப்படத்தை தாராளமாக டால்பி, அட்மாஸ் டிஜிட்டல் அனுபவத்துடன் தியேட்டரில் கண்டு மிரளலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

`லவ் டுடே’ – திரை விமர்சனம்

Posted by - November 5, 2022 0
காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். கோலிவுட்டில்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் “அயலான்” இசை வெளியீடு

Posted by - December 30, 2023 0
கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா,…

நிருபர் டி.வி. செய்தியாளர் திருமண நாள் கொண்டாட்டம்

Posted by - August 18, 2026 0
நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி.யின் செய்தியாளரும் சமூக ஆர்வலருமான புலித்தேவன் – சந்திரகலா தம்பதியினர் தங்களது 30-ம் ஆண்டு திருமண நாளை இன்று (19.08.2026) மகிழ்ச்சியுடன்…

கண்ணை நம்பாதே – திரை விமர்சனம்

Posted by - March 17, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”. படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என…

ஆர்எம்வி-தி கிங் மேக்கர்: சினிமா விமர்சனம்

Posted by - December 28, 2025 0
புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் வலதுகரமாக கருதப்பட்டவர் ஆர்எம்வி என்று அழைக்கப்பட்ட அருளாளர் இராம வீரப்பன். ஆர்எம்வீ-யின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியப் பகுதிகளை மட்டும் “ஆர்எம்வி…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.