சொர்க்கவாசல் – சினிமா விமர்சனம்

471 0

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்துள்ளது.

1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.

சிறைக் கைதியாக வரும் செல்வராகவன் சிறைக்குள் இருந்தபடி கட்டப்பஞ்சயத்து, போதை மருந்து விற்பனை என சென்னையை ஆட்டிப் படைக்கிறார். அதே நேரத்தில் பல்வேறு கனவுகளுடன் உலா வந்த ஆர்.ஜே. பாலாஜி சூழ்நிலையில் சிக்கி சிறை செல்ல நேரிடுகிறது. அவர்களுக்குள் என்ன தொடர்பு, கதாநாயகன் தனது லட்சியத்தை எட்டினாரா, செல்வராகவன் என்ன ஆனார் என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலாக படத்தின் மீதிக்கதை அமைந்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். அருமையான நடிப்பை தந்திருக்கிறார்.

செல்வராகவன், சானியா அய்யப்பன், நட்டி நட்ராஜ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அனைவரும் யதார்த்தமான நடிப்பில் நம் நெஞ்சில் குடிகொள்கிறார்கள்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதை நகர்கிறது. இயக்குநரின் உழைப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் உணர முடிகிறது.

கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பிளஸ் என்றே கூறலாம்.

தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதை புதிது என்றாலும், கலையை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் இதுவொரு சொர்க்கவாசல் தான்.

– நிருபர் நாராயணன்

Related Post

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025 0
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா…

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022 0
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

ஆகஸ்ட் 16, 1947 – திரை விமர்சனம்

Posted by - April 9, 2023 0
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நாடு சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. நெல்லை சீமையின் செங்காடு கிராமத்தில் வெளியுலக தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் வசிக்கும்…

‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - December 15, 2025 0
‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.