வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

424 0

க்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் திரு.புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

சபாநாயகர் ஓம் பிர்லா உரை

ஸ்ரீ ஓம் பிர்லா தனது பட்டமளிப்பு விழா உரையில், திரு எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மறைந்த திரு. ஐசரி வேலனின் பாரம்பரியத்தை தொடரும் அவரது மகனான டாக்டர். ஐசரி கணேஷின் தொலைநோக்கு தலைமையின் கீழ் பல்கலைக்கழகம் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றது என பாராட்டினார்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வடிவமைப்பதில் டாக்டர் கணேஷின் அவர்களின் பங்கு அளப்பரியது என்றும் பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு மையங்களை உருவாக்க வழிவகுத்த சிந்தனை மற்றும் அணுகுமுறையை ஆகியவற்றை கண்டு வியக்கிறேன் என்றார்.

“இன்று எனக்கு முன்னால் தன்னம்பிக்கையுடன் அமர்ந்துள்ள பட்டதாரிகளைப் பார்க்கும்போது, நான் மாணவர்களை மட்டுமல்ல, எதிர்காலத் தலைவர்களையும்பார்க்கிறேன். நீங்கள் ஒரு ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) தூண்கள், மேலும் நமது தேசத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு வழிநடத்தும் பொறுப்பு இப்போது உங்கள் மீது உள்ளது” என்று கூறினார்.

பணிவு மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை போதித்தவர், தமிழகத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவரின் வழி நடந்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் செலுத்துவோம் என்றார்.

இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட திரு. எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதேபோல பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் திருமிகு புல்லேலா கோபிசந்த் அவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் ஐசரி கே கணேஷ் – நிறுவனர் வேந்தர், டாக்டர் ஏ ஜோதி முருகன் இணை வேந்தர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு), டாக்டர் ஆர்த்தி கணேஷ் – இணை வேந்தர் (நிர்வாகம்), டாக்டர் ஃப்ரீத்தா கணேஷ் – துணைத் தலைவர், வேல்ஸ் குழுமங்கள் , டாக்டர். ஸ்ரீமன் நாராயணன் – துணைவேந்தர், டாக்டர்.எம்.பாஸ்கரன் – சார்பு – துணைவேந்தர், டாக்டர்.பி.சரவணன் – பதிவாளர் மற்றும் டாக்டர்.ஏ.உதய குமார் – தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

வேல்ஸ் பல்கலைக்கழகம்:

2008 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் MHRD ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட VISTAS, சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கலைக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

மருத்துவம், நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வரையிலான திட்டங்களை வழங்குகிறது . இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் மேலும் ஒரு சாதனையாக மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் NAAC A++ தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

Related Post

tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devotees

திருப்பதி கோயிலில் இனி நேரடி இலவச தரிசன டிக்கெட்…

Posted by - February 5, 2022 0
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம்…

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

180 தொகுதிகளை கைப்பற்றும் திமுக – (மெரினாவில் ஆல் இன் ஆல் அழகுராஜா – 7)

Posted by - January 16, 2026 0
உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரை. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கடற்கரையில் காணும் திசையெல்லாம் மக்கள் கூட்டம். மாலை வேளையில், நூற்றுக்கணக்கான கடைகள் பேட்டரி விளக்குகளுடன் அழகாக…

அன்பகம் கலையுடன் 47 ஆண்டு கால நட்பு: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Posted by - February 22, 2022 0
திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.