அன்பகம் கலையுடன் 47 ஆண்டு கால நட்பு: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

884 0
புகைப்படம்- போட்டோ செல்வம்

திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அன்பகம் கலையின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பகம் கலையைப் பற்றி இங்கு ஒவ்வொருவரும் எடுத்து சொன்னபோது நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த சூழ்நிலையிலும் அன்பகம் கலை தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை நான் பார்த்தேன். தேர்தலில் கட்சியினர் சிறப்பாக பணியாற்றுகிறார்களா? என்று மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு அன்பகம் கலை பேசிக் கொண்டிருந்தார். இதுதான் திமுக.

நான் ஒரு ஆண்டு மிசாவில் கைதாகி சென்னை சிறையில் அடைபட்டு, அதன்பிறகு விடுதலையாகி வெளியே வந்தபோது, முதல்முதலாக கலையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். சிறையில் இருந்து கோபாலபுரம் வரை தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து வந்து முழங்கியவர் அன்பகம் கலை. அதுமுதல் இன்று வரை 47 ஆண்டு காலம் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரு முறை கூட அன்பகம் கலை என்னிடம் இதை செய்து கொடுங்கள் என்று கேட்டதில்லை.

என்றைக்கும் எனக்கு பக்கபலமாக அன்பகம் கலை இருந்து கொண்டிருக்கிறார். நான் சொல்வதை உடனே நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர். நான் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு செல்வதாக இருந்தாலும், அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் 2 நாட்களுக்கு முன்பே கலை அங்கு சென்றுவிடுவார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்பதை பார்ப்பார்.

இன்று அவரது இல்லத் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதிலாவது அவர் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருப்பாரா என்று பார்த்தேன். ஆனால் இன்றும் அவர் எப்போதும் அணியும் அதே காவி கலர் உடைதான். அவரது இல்லத்தில் நடைபெறும் திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

– ஆர். நாராயணன்

 

Related Post

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Posted by - February 6, 2022 0
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின்…

தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

Posted by - January 9, 2022 0
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர்,…

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025 0
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா…

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

Posted by - May 10, 2023 0
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். சத்யபாமா…

கட்டிக்குளம் கிராமத்தில் மின்சார வாரியம் “அபார சாதனை”

Posted by - July 4, 2024 0
ஊரின் பெயரை கம்பீரமாக தாங்கி நிற்கும் இந்த பெயர்ப் பலகைக்கு மேலே, மின்சாரக் கம்பி செல்கிறது பாருங்கள்… ஆனால், இதில் கம்பி மட்டும் தான் உள்ளது, மின்சாரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

4 + 20 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.