முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில், பிரம்மாண்டமாக நடைபெறும். பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது, செய்தியாளர் சந்திப்பு, உபசரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரஸ் ரிலீஸ் தயாரித்தல், நிகழ்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான ஏற்பாடுகள், நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுதல் என பல்வேறு கட்டப் பணிகளை உள்ளடக்கியது திரையுலகின் PRO
