ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

893 0

புகைப்படம்: புலித்தேவன்

சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின் இளைய மகள் ஜெர்சி தயாமின் அமிர்தாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த நல்லமாடன் – பாலம்மாள் தம்பதியின்  மகன் முத்துராஜ்-க்கும் சென்னை ஆவடியில் திருமணம் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காவல்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஜேம்ஸ், பணியின் போது பொதுமக்களிடம் இனிமையாக பழகக்கூடியவர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார். காவல்துறையில் இவரது சிறப்பான சேவையை கெளரவிக்கும் வகையில், நிருபர் டைம்ஸ் பத்திரிகை அவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

– நிருபர் ஆர். நாராயணன்

Related Post

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023 0
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

விஜய் ஆண்டனியின் 25வது படம் “சக்தி திருமகன்”

Posted by - February 1, 2025 0
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக…

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

அம்பத்தூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 22, 2022 0
அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.