ஆவடி மேயர் வாய்ப்பு யாருக்கு தெரியுமா?

941 0

சென்னையை அடுத்த ஆவடி பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், முதல் மேயர் வாய்ப்பு யாருக்கு என்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

முதலமைச்சர் மு..ஸ்டாலினுடன் சுமார் 50 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு கொண்டுள்ள ஆவடி எம்எல்ஏ நாசர் பால்வளத்துறை அமைச்சராக உள்ள நிலையில், மேயர் வாய்ப்பு அவரது மகன் ஆசிம் ராஜாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் சீனியர் ஒருவருகக்கு மேயர் பதவியை வழங்குவது குறித்தும் கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது.

ஒருவேளை மேயர் பதவி இல்லாவிட்டாலும் துணை மேயர் பதவி அமைச்சர் நாசரின் மகனுக்கு உறுதி என நமது ஊர்குருவி தகவல்கள் கூறுகின்றன.

ஆவடியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 35 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே, தாம்பரம் மேயர் பதவிக்கு தாம்பரம் எம்எல்ஏ ராஜா மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆதரவாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கவுன்சிலர்களை கவர்ந்திழுக்க பேரம் “ஒன் சி” ரேஞ்சில் பேசப்படுவதாக தகவல் பரவி வருகிறது. மேயர் பதவியை போல துணை மேயர் பதவிக்கும் போட்டி நிலவுவதால், பல்லாவரம் மற்றும் தாம்பரம் தரப்பினருக்கு, ஆளுக்கு ஒரு பதவியை ஒதுக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த தரப்புக்கு மேயர் பதவி என்பதில் மட்டும் இழுபறி நீடிக்கிறது. இறுதி முடிவு முதலமைச்சரின் கையில்…!

ஊர்குருவி இரை தேடி பறந்தது…

Related Post

விஜய் கட்சியின் கலர் சென்டிமென்ட்

Posted by - February 8, 2024 0
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் சின்னம் மற்றும் கொடி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

டுவிட்டர் டிரெண்டிங் – மிரண்டுபோன TNPSC

Posted by - March 9, 2023 0
சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 397 கிராம…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 3

Posted by - May 20, 2025 0
சென்னை மெரீனா பீச். தள்ளுவண்டியில் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா. “அழகு அண்ணே…!” என கூவியபடி வந்தார் கிசு கிசு கோவாலு.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.