tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devotees

திருப்பதி கோயிலில் இனி நேரடி இலவச தரிசன டிக்கெட்…

884 0

tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devoteesதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. வரும் 15-ம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் 15-ம் தேதி முதல் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

திருப்பதி அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக வரும் 16-ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது.

அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் சீரமைக்கப்படும். மேலும் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.

Related Post

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

Posted by - January 9, 2022 0
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர்,…

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

Posted by - March 20, 2025 0
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.