எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்: அனிதா ராதாகிருஷ்ணன்

32 0

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (BNS 352), அரசு எதிராக பேச்சு (BNS 353-2) என இரு பிரிவுகளில் ஆத்தூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் அழைத்து சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாக கூறி ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது;

“எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை மூலம் தவெகவினர் வற்புறுத்துகின்றனர். தவெகவிற்கு செல்ல வேண்டும் என்ற வகையில் என்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.

திமுகவில் வலுவாக இருப்போம். எவருக்கும் அடிபணிய மாட்டோம். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம். எந்த நெருக்கடிக்கும் அஞ்ச மாட்டோம். எந்த கொம்பனாலும் என்னை தொட்டு அசைத்துப் பார்க்க முடியாது. என்னை ராஜினாமா செய்ய வைக்க முடியாது” என தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவசரம் அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது கூறிய புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Posted by - December 2, 2024 0
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன்…

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023 0
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்…!

Posted by - January 12, 2024 0
பிரதமர் மோடி சமீபத்தில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான அழகு ததும்பும் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட பிரதமர் அதுதொடர்பான…

மாதம் 40,000 ரூபாய் EMI கட்டுகிறேன்: சின்னத்திரை நடிகை திவ்யா

Posted by - October 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.