சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

843 0

டிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு தொடர்பாக, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவரது நீலாங்கரை பங்களாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது.

2011-லேயே அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டினார் விஜய். டெல்லியில் ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஏனோ அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதனிடையே அரசியல் கட்சி ஒன்றை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்ய, இதுதொடர்பாக தந்தையுடன் விஜய்க்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது வாரிசு பட விநியோகத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டதால், திமுக மீது விஜய் கடும் வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தனது பலத்தை காட்ட விரும்புகிறார் விஜய்.

வரும் புத்தாண்டில் தனது அரசியல் பயணம் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிடுவார் என அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் நடைபெறவுள்ள நிலையில், அரசியலுக்கு வர இதுவே சரியான தருணம் என, அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், “நமக்கு தமிழக அரசியலே இலக்கு” என்ற கண்ணோட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, விஜய் வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னோட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில், ரஜினி பாணியில் “வாய்ஸ்” கொடுக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர்களை களமிறக்கி வெற்றி கண்ட விஜய், அடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு அதிரடி திட்டத்தை வைத்திருப்பதாகவும், இதன் பின்னணியில் தாமரை கட்சி உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தகவலை நமது தலைமை நிருபரிடம் கூறிவிட்டு, இந்த மார்கழி குளிரில் தனது கூட்டை நோக்கி பறந்தது ஊர்குருவி.

Related Post

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 4, 2022 0
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி. ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல்…

திருவேற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்

Posted by - September 5, 2026 0
சென்னை திருவேற்காடு யாதவ நல சங்கம் சார்பில், சிவன் கோயில் அருகே 4-ம் ஆண்டாக உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவர்கள் மற்றும்…

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்

Posted by - December 22, 2023 0
ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் கிராமத்தில் ஜாலி பேர்வழியாக உலா வருகிறார். அவரது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.