ஆதார் – பான் இணைக்க இன்று கடைசி நாள்

1115 0

தார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும். அத்துடன் 31-ம் தேதிக்கு பிறகு அபராதம் செலுத்தி தான் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதிக்குள் இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும்.
அதன்பிறகு இணைக்க ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராத கட்டணம் செலுத்தினால் மட்டுமே பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையா சொத்துகள் வாங்குதல், வங்கி கணக்கு தொடங்குதல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்துதல் போன்றவற்றுக்கு பான் கார்டு எண் குறிப்பிடுவது கட்டாயம். எனவே, பான் எண் செயலிழந்து விட்டால், மேற்கண்ட பரிமாற்றங்களை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

Related Post

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022 0
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

Posted by - May 10, 2023 0
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். சத்யபாமா…

நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

Posted by - April 6, 2025 0
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால்,…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் : கொண்டாட்டத்தில் தமிழகம்

Posted by - June 22, 2026 0
திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தைப் படைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சி. ஜோசப் விஜய் இன்று தமது…

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.