நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

508 0

மிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால், குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அடிதடி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதும் என்பது இப்பகுதிகளில் பெரும் சவாலானதாக இருக்கும். இதனால், தூத்துக்குடி தென் பாகம், சிப்காட் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். தப்பித்தவறி யாரேனும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் வந்துவிட்டால், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இணைந்து சதி செய்து அவர்களை பழிவாங்கும் போக்கு நிலவுகிறது. அப்படித்தான் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன், கடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றார். மேலும், தூத்துக்குடி எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மக்கள் நலனுக்காக துடிப்பாக செயல்பட்டு வந்தார் எஸ்.ஐ. முத்தமிழ் அரசன். உதாரணமாக, சமீபத்தில் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது, அந்த பிரச்சனையை திறமையாக கையாண்டு போராட்டத்தை வாபஸ் பெற வைத்ததுடன், அவர்களுக்கு உடனடியாக மண்ணெண்ணெய் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார் முத்தமிழ் அரசன்.

இந்நிலையில், தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆகியோருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துடிப்பான நேரடி ஐபிஎஸ் அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்தின் வழியில் செயல்பட்ட எஸ்.ஐ. முத்தமிழ் அரசனை மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியமர்த்த வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதி வெல்லட்டும்…! மக்கள் காத்திருக்கிறார்கள்…!!

– நிருபர் நாராயணன்

Related Post

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

Posted by - September 6, 2023 0
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து…

எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்: அனிதா ராதாகிருஷ்ணன்

Posted by - July 4, 2026 0
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (BNS 352), அரசு…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 3

Posted by - May 20, 2025 0
சென்னை மெரீனா பீச். தள்ளுவண்டியில் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா. “அழகு அண்ணே…!” என கூவியபடி வந்தார் கிசு கிசு கோவாலு.…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் தமிழ் திருமணப் பத்திரிகை

Posted by - February 14, 2022 0
தமிழ் காதல்…! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள இவர்களது திருமண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.