ஸ்பா சென்டரில் மாமூல் கேட்ட பெண் எஸ்.ஐ.க்கள் அதிரடி கைது

61 0

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த பெண்ணிடம் மாதம்தோறும் மாமூலாக ரூ. 50 ஆயிரம் கேட்டு, ரூ.20,000 லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த ஜெனிபர் (30). இவர் திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 20 ஆம் தேதி இந்த அழகு நிலையத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், உரிய அனுமதியின்றி தொழில் நடத்தப்படுவதாகவும் கூறி திருமுல்லைவாயில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, திடீரென கடையை மூடிவிட்டு காவல் நிலையத்திற்கு வந்து பேசுங்கள், அதன் பிறகே தொடர்ந்து தொழில் நடத்த முடியும் என்று போலீஸார் கூறிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மறுநாள் காவல் நிலையத்திற்கு ஜெனிபர் சென்றுள்ளார். அப்போது, ஸ்பா மற்றும் அழகு நிலையத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து நடத்த வேண்டுமெனில் மாதம்தோறும் ரூ. 50,000 மாமூல் வழங்க வேண்டும் என்று சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அமுல் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி ஆகியோர் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சளுக்கு ஆளான ஜெனிபர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி, மாதம் ரூ. 20,000 வழங்க சம்மதிப்பதாக போலீசாரிடம் ஜெனிபர் தெரிவித்தார். பின்னர் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜெனிபரிடம் வழங்கப்பட்டு, திட்டமிட்டபடி காவல் நிலையத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அமுலிடம் ஜெனிபர் ரூ.20,000 பணத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உடனடியாக சோதனை நடத்தி அமுலை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமியையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Post

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

ஓலைப்பெட்டியில் இனி திருப்பதி லட்டு…!

Posted by - February 25, 2023 0
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வதற்காக இனி ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

விஜய் கட்சியின் கலர் சென்டிமென்ட்

Posted by - February 8, 2024 0
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் சின்னம் மற்றும் கொடி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Posted by - December 24, 2023 0
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு Raindropss Charity Foundation, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், ஆனந்தம் இல்லம் இணைந்து Jingle Bells Be a Santa என்ற உணர்வுப்பூர்வமான…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.