ஓலைப்பெட்டியில் இனி திருப்பதி லட்டு…!

748 0

லகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வதற்காக இனி ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி மலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கவுன்ட்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில், மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும், கிராம மக்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு ஏற்கனவே பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக ஓலைப் பெட்டிகளும் விற்கப்பட உள்ளது.

Related Post

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023 0
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள்…

ஆல் இன் ஆல் அழகுராஜா – 3

Posted by - May 20, 2025 0
சென்னை மெரீனா பீச். தள்ளுவண்டியில் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா. “அழகு அண்ணே…!” என கூவியபடி வந்தார் கிசு கிசு கோவாலு.…

பரபரப்பாக விற்பனை ஆகும் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்

Posted by - January 17, 2024 0
நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த் ‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம்…

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

Posted by - December 23, 2022 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு…

நெருப்பாக இருப்போம், இலக்கை அடைவோம்: விஜய்

Posted by - October 27, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குழந்தைகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.