IJK தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா

816 0

ந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20,000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார்.

நிகழ்வில் பாரிவேந்தர் எம்.பி. பேசியதாவது, “தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் ‘ஐஜேகே’வின் ஒரு சிறிய முன்னோட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 24 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதே வளாகத்தில் தான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரவிபச்சமுத்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ‘மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை’ என்பது போல் என் மகனால் எனக்கு எப்போதுமே பெருமை வந்து சேரும்” என்றார்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து பேசியதாவது, “இளைஞர்களுக்காக பல சேவைகளையும் தொண்டுகளையும் பாரிவேந்தர் கல்வியாளராக செய்துள்ளார். அவருக்கு என்றுமே பணத்தின் மீது ஆசை இருந்ததே இல்லை. எந்தவொரு தொழில் தொடங்கும்போதும் அவர் பணம் குறித்து கவலைப்பட்டதும் இல்லை.

சுயநலம் இல்லாத அவரிடம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அன்பு செலுத்தி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே, ஒரு கோட்பாட்டை உருவாக்கி, ஓர் அடையாளமாக இருக்க வேண்டும் என்றுதான். நடுத்தர மக்களுக்கும் அரசியல் தேவை. அரசியல் என்றால் அடுத்த வரை திட்ட வேண்டும் என்பது கிடையாது. இது எங்கள் கட்சியின் கொள்கையாகும்” என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, “மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில்
கூட்டணி வருமா, வராதா என்கிற நிலையை மாற்றதான் இந்த கூட்டம். பாஜக, அதிமுகவை ஒருசேர அழைத்து வந்து எதிர்க்கட்சிக்கு தற்போது செய்தியாக அறிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அசைக்க முடியாத கூட்டணி வரும். பாரிவேந்தர் அதனை தற்போது முன்னெடுத்துள்ளார்” என்றார்.

இந்நிகழ்வில் அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜி.ராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், துணைத் தலைவர் ஆனந்த முருகன், துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜி.ஜீவா, மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், முன்னாள் தலைவர் கோவை தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Post

தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

Posted by - April 9, 2024 0
திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித…

ரஜினியின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு

Posted by - February 11, 2022 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர்…

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

Posted by - July 31, 2024 0
இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார். விண்வெளி ஆய்வு,…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

போலி சான்றிதழ் கொடுத்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்தது அம்பலம்

Posted by - April 6, 2022 0
தமிழ்நாட்டில் தபால் துறை பணிகளுக்கு ஏராளமானோர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி தகவல் அளிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

19 + 1 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.