கொலைச்சேவல் – சினிமா விமர்சனம்

136 0

ர்பி பிலிம்ஸ் தயாரிப்பில் துதிவாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் கொலைச்சேவல்.

கலையரசன், தீபா பாலு, பாலசரவணன், கஜராஜ், விஜய் சத்யா, ஆதவ் சந்திரா, அகரன் வெங்கட், விஜயலக்ஷ்மி, ஜெயலட்சுமி, ராஜாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆணவக் கொலையை அதன் ஆழம் வரை சென்று அழகாக படம்பிடித்து காட்டியுள்ளனர்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் தம்பதி கலையரசன் மற்றும் தீபா குலதெய்வக் கோயில் அமைந்துள்ள மலைக்கோயிலுக்கு செல்லும்போது, நிகழும் அசம்பாவிதமும், அதன் பின்பு என்ன நடக்கிறது என்பதும் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

கலையரசனும் தீபாவும் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் தீபா ரசிகர்களை அழவைத்து விடுகிறார்.

பால சரவணன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

படத்தின் முதல் பாதி பரபரப்பாக நகர்கிறது. அதற்கு பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சாந்தனின் மிரட்டல் இசையும் உறுதுணையாக உள்ளன. ஜவ்வாது மலையின் அழகையும் அமைதியையும் காட்சிக்கு ஏற்றவாறு பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

சுவரில் வரையப்பட்டுள்ள இளையராஜா ஓவியமும், நிறைசூழி தெய்வச் சிலையும் ஆர்ட் டைரக்டர் சரவணா அபிராமனின் நுணுக்கமான பங்களிப்பை வெளிபடுத்துகிறது.

‘சாதி இல்லைனு சாமியே சொன்னாலும் இவங்க நம்பமாட்டாங்க’ என்ற வசனம் அருமை.

கிளைமாக்ஸ் காட்சியில் மனிதர்களின் கொடூர புத்தியை கண்ணாடி போல் வெள்ளித்திரையில் அம்பலப்படுத்தியுள்ளனர். சபாஷ்.

கோடை வெயிலுக்கு இணையான த்ரில்லர் படம்.  ( குறிப்பு :  ஏசி தியேட்டரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்டு ரசிக்கவும் )

– நிருபர் நாராயணன்

Related Post

ரஜினியின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு

Posted by - February 11, 2022 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர்…

சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ‘கார்மேனி செல்வம்’

Posted by - March 28, 2026 0
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம்…

ஓடிடியில் வெளியானது “லெஜண்ட்” – ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted by - March 4, 2023 0
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்த “லெஜண்ட்” திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படத்தை ஓடிடியிலும் காணும் வாய்ப்பு…

புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

Posted by - August 28, 2024 0
ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக…

டிடி ரிடர்ன்ஸ் – திரை விமர்சனம்

Posted by - July 31, 2023 0
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கலகலப்பான கேரக்டரில் அசத்தியுள்ளார் சந்தானம். அவரது காதலியின் சகோதரி, திருமண நாளில் ஓடிப்போவதால் செலவு செய்த பணத்தை மணமகன் குடும்பத்தினர் திருப்பி கேட்கிறார்கள்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.