லீடர் படத்தின் டீசர் வெளியீடு

139 0

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.

சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது.

ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது.

முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Related Post

‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ – சினிமா விமர்சனம்

Posted by - August 4, 2025 0
சின்னத்தம்பி புரொடக்சன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் படம் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’. சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக உள்ள இந்த திரைப்படத்தை…

ட்ராமா – சினிமா விமர்சனம்

Posted by - March 23, 2025 0
அறிமுக இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள திரைப்படம் ட்ராமா (Trauma). விவேக் பிரசன்னா, சாந்தினி தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காக மருத்துவத்துறையின் உதவியை…

‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - February 22, 2024 0
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.…

கண்ணை நம்பாதே – திரை விமர்சனம்

Posted by - March 17, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”. படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என…

கோவை சரளா எனது குரு: “செம்பி” இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

Posted by - October 28, 2022 0
“செம்பி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் கலர்ஃபுல்லாக நடைபெற்றது. கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.