டென் ஹவர்ஸ் – சினிமா விமர்சனம்

63 0

ரவு நேர ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற தொலைபேசியும், மகளை காணவில்லை என்ற புகாரும் குறித்து விசாரிக்க களமிறங்குகிறார் கட்டுமஸ்தான கதாநாயகன் சிபிராஜ். சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக வரும் அவர், துப்பு துலக்க நடத்தும் 10 மணி நேர விசாரணையே டென் ஹவர்ஸ் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் சிபி, விடிந்தால் கோயிலுக்கு புறப்பட வேண்டும் என்ற சூழலில் ஜெட் வேகத்தில் கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். படத்தை கட்டி இழுத்துச் செல்ல வேண்டிய மொத்த பொறுப்பும் ஏற்று நடித்திருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.

படத்தில் கதாநாயகி இல்லை என்பதால் ரொமான்ஸ் காட்சிகளும் கிடையாது.

ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், சரவண சுப்பையா, திலீபன், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிரட்டலான திரில்லிங், சஸ்பென்ஸ் நகர்வுக்கு இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியும் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கும் போட்டி போட்டு தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இவர் தான் கொலைகாரன் என்ற சந்தேகத்தை சிலர் மீது விழவைத்து, பின்னர் அவர் இல்லை என்று மீண்டும் மீண்டும் திரைக்கதை வேகமெடுக்கும் வகையில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்.

ஆம்னி பஸ் வேகத்தில் ஓடும் கதைக்கு ஒருசில ஸ்பீட் பிரேக்கர்கள் இருந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படம். அந்தவகையில், டென் ஹவர்ஸ் ரசிகர்களின் என்ஜாய் ஹவர்ஸ்.

– நிருபர் நாராயணன்

Related Post

‘லெவன் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - May 11, 2025 0
ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

சான்றிதழ் – சினிமா விமர்சனம்

Posted by - August 6, 2023 0
கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர். இதனை கெளரவிக்கும்…

ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்

Posted by - December 22, 2023 0
ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் கிராமத்தில் ஜாலி பேர்வழியாக உலா வருகிறார். அவரது…

அகிலன் – திரை விமர்சனம்

Posted by - March 10, 2023 0
கடல்வழி வணிகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்து சுற்றிச் சுழல்கிறது அகிலன் திரைப்படம். பூலோகம் படத்தின் அமர்க்களமான வெற்றிக்கு பின்னர், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம்…

சித்தா – சினிமா விமர்சனம்

Posted by - September 27, 2023 0
பாய்ஸ் புகழ் சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.