இரும்பன் – திரை விமர்சனம்

986 0

ம்ஜிஆரின் பேரனும் சுதா விஜயனின் மகனுமான ஜூனியர் எம்ஜிஆர் நடித்துள்ள படம் இரும்பன்.

குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞராக நடித்து அசத்தியுள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். அஜானுபாகுவான தோற்றமும் எம்ஜிஆரை போன்ற அழகும் கொண்ட புதிய கதாநாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவது உறுதி.

எம்ஜிஆரை பச்சைக் குத்திக்கொண்டு ஆஃபிஸ் என்ற கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்துள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். ஜெயின் சமூக இளம்துறவி மஹிமாவாக வருகிறார் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா. இவர்கள் இருவருக்கும் இடையே எப்படி காதல் மலர்கிறது, இவர்களின் காதலுக்கு நண்பர்கள் எப்படி உதவி செய்கின்றனர், கதாநாயகன் காதலியை கரம்பிடித்தாரா? என்பது தான் படத்தின் கதை.

கடலில் விழுந்த நிலையில், கதாநாயகிக்கு கதாநாயகன் மீது காதல் வருவது அசத்தல். அப்போது “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க” என்ற பழைய பாடலை ரீமேக் செய்து டூயட் சீன் வைத்துள்ளனர். பாடலும் அருமை, காட்சிப்படுத்திய விதமும் அழகு.

“உன் வெள்ளந்தியும் அழகுதான்” பாடல் ரொம்ப க்யூட். ஸ்ரீகாந்த் தேவாவின் பங்களிப்பு ரீமேக் சாங்கிலும் பின்னணி இசையிலும் நன்கு உணர்த்துகிறது.

பிளேடு கேரக்டரில் யோகிபாபு, ஆஸ்பத்திரி கதாபாத்திரத்தில் சென்றாயன் உள்ளிட்டோர் மிக கச்சிதமாக கொடுத்த வேலையை நிறைவாக செய்து பாராட்டை அள்ளுகின்றனர்.

புயலால் ஓர் அழகிய தீவில் படகு கரை ஒதுங்க, மாலை மாற்றிக் கொள்கிறது காதல் ஜோடி. அந்த தீவை மிக அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கேமரா.

படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கீரா.

மொத்தத்தில் இரும்பன், ரசிகர்களுக்கு கரும்பு போல் இனிக்கும் கரும்பன்.

– நிருபர் நாராயணன்

Related Post

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…

டிடி ரிடர்ன்ஸ் – திரை விமர்சனம்

Posted by - July 31, 2023 0
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கலகலப்பான கேரக்டரில் அசத்தியுள்ளார் சந்தானம். அவரது காதலியின் சகோதரி, திருமண நாளில் ஓடிப்போவதால் செலவு செய்த பணத்தை மணமகன் குடும்பத்தினர் திருப்பி கேட்கிறார்கள்.…

‘ஜின் – தி பெட்’ இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Posted by - May 25, 2025 0
‘பிக் பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும், ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின்…

கொம்புசீவி – சினிமா விமர்சனம்

Posted by - December 21, 2025 0
ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகியுள்ளது ‘கொம்புசீவி’. மதுரையில் 1970-களில் வைகை அணை கட்டுவதற்காக சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுவதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படுகின்றனர்.…

“டக்கர்” – திரை விமர்சனம்

Posted by - June 10, 2023 0
நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”. பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.