மலையாள திரையுலகம் சமீப காலமாக Pan India படமாக உருவாகத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் Raw Gangster படமாக வெளிவந்துள்ளது கட்டாளன்.
சட்டவிரோத யானைத் தந்த கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் வெளிவந்துள்ளது காட்டாளன் திரைப்படம்.
கதாநாயகன் ஆண்டனி வர்கீஸ் வழக்கம்போல் மிரட்டலான உடல்மொழியுடன் திரையில் நம்பகத்தன்மையாக ஏற்படுத்தி இருக்கிறார். அதேபோல், காட்டில் தந்தங்களை கடத்தும் கேங்ஸ்டர் மாரியாக நடிப்பில் சும்மா மிரட்டியுள்ளார் சுனில்.
யானை துரத்தல் காட்சிகள் திரையரங்கில் ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை தருகின்றன. உண்மையான யானைகளை பயன்படுத்தி படம் பிடிக்கப்பட்டுள்ளது அருமை.
படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், அதிலும் ஸ்டெண்ட் காட்சிகள் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளன. ரவி பசோர் இசை செம மாஸ். சில காட்சிகளில் அந்த இசையே படத்தை தூக்கிச் செல்லும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
மலையாளச் சாரல் வீசும் இந்த திரைப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படம் என்றே கூறலாம்.
மொத்தத்தில், காட்டாளன் வேட்டையாடியது யானைகளை மட்டுமல்ல, ரசிகர்களின் இதயங்களையும் தான்.
– நிருபர் நாராயணன்
