செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்

60 0

மிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றதும் அவர் பேசிய முதல் பேச்சு ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பதவியேற்பு விழா முடிந்த கையோடு, மக்கள் முன்னிலையில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பில் அவர் தனது முதல் கையெழுத்தை இட்டார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பதவியேற்ற பின் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் பேசியதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்…

சினிமாவில் ஒரு சாதாரண உதவி இயக்குநர் குடும்பத்தில் பிறந்த பிள்ளை நான். எனக்கும் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

நான் உங்கள் பிள்ளை மாதிரி, மகன் மாதிரி, தம்பி மாதிரிதான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தீர்கள். இப்போது உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த உங்கள் விஜய்யை, நீ வா விஜய் தம்பி நாங்கள் இருக்கிறோம் என சொல்லி அவ்வளவு அன்பாக ஏற்றுக்கொண்டீர்கள்.

மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாகூட எடுக்கமாட்டேன். இந்த விஜய் தவறு செய்யமாட்டான். தவறு செய்யவும் விடமாட்டான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நம் கோட்பாடு. அனைத்து மதத்தினரின் முகம்தான் இந்த விஜய்யின் முகம். இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழு கவனம் செலுத்துவேன்

தமிழ்நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதை நான் அறிவேன். அனைத்துத் திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்துவதற்கு எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் சரி, எனது அமைச்சரவையில் உள்ளவர்களோ அல்லது கட்சியினரோ தவறு செய்தால், அவர்களை கேள்வி கேட்பேன். தவறுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக, யாரும் மமதையுடன் நடந்துகொள்ள கூடாது. இந்த வெற்றி மக்கள் நமக்களித்த பொறுப்பு. அதை உணர்ந்து அடக்கத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

குட்டி நண்பா, நண்பீஸ்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு அனைத்தையும் இந்த விஜய் மாமா செய்துகொடுப்பார் என்று நம்பலாம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் கட்சியினர் இல்லையென்றால் எதுவுமே இல்லை. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.

இது ஒரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதி இப்போதிருந்து தொடங்கிவிட்டது. ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும்.

நன்றி, வணக்கம்.

இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.

இதையடுத்து, தலைமைச் செயலகம் சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த விஜய் அவர்கள், தான் கையெழுத்திட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை கொடுப்பேன் என்ற முழக்கத்துடன் அரசியலில் களமிறங்கிய விஜய், இன்று முதலமைச்சராக பொறுப்பேற்று தனது முதல் உரையை மிகவும் முதிர்ச்சியுடன் ஆற்றியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை அவரது ரசிகர்களும் தொண்டர்களும் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

முதலமைச்சராக பதவியேற்றுள்ள பாசத்திற்குரிய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு NIRUBAR TIMES சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை

Posted by - January 23, 2024 0
ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை…

சின்னத்திரை தொகுப்பாளர் நடிகை ரம்யாவின் புத்தகம் வெளியீடு

Posted by - January 21, 2023 0
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் எழுதிய ‘Stop Weighting’ புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம்…

நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!

Posted by - April 6, 2025 0
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால்,…

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023 0
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.