ஷு – திரைப்பட விமர்சனம்

1104 0

நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து ஷூ படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனாலும் திரைக்காட்சிகள் குழந்தைகளை சுற்றியே நகர்கிறது.

ஆசிரமத்தில் இருந்து பெண் குழந்தைகளை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது ஒரு கொடூரக் கும்பல். மறுபுறம் தாய் இல்லாத குழந்தை அப்பாவின் மதுபோதையால் கஷ்டப்படுகிறது. அதேநேரத்தில் ஷூ வடிவத்தில் டைம் மெஷினை கண்டுபிடித்த திலீபன் அதை தொலைத்துவிடுகிறார்.

இவர்கள் மூவரையும் ஒரு மையப்புள்ளியில் இணைக்கிறது ரிப்பீட் ஷு திரைப்படம்.

பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் மீட்கப்பட்டார்களா? திலீபனுக்கு டைம் மெஷின் ஷூ கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை தருவது படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் கல்யாண் மாறுபட்ட கோணத்தில் கதையை நகர்த்தி சென்றுள்ளார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும், காட்சி ஊடக நெறிப்படி கடத்தப்படும் குழந்தைகளின் குளோசப் காட்சிகளை சற்று தவிர்த்திருக்கலாம்.

சி.எஸ்.சாமின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டம் தருகிறது.

இப்படம் வியாபார நோக்கில் இல்லாமல் சமூக ஆர்வத்துடன் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு படமாக கருதி, தமிழக அரசு வரி சலுகை, விருதுகள் போன்றவற்றை வழங்கி ஊக்கப்படுத்தலாம்.

Related Post

செம்பி – திரை விமர்சனம்

Posted by - December 29, 2022 0
அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது. மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என…

கோட் – சினிமா விமர்சனம்

Posted by - September 9, 2024 0
அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள முதல் படம் GOAT (Greatest Of All Time). தீவிரவாதத் தடுப்பு படையின் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக…

கட்டாளன் – சினிமா விமர்சனம்

Posted by - June 2, 2026 0
மலையாள திரையுலகம் சமீப காலமாக Pan India படமாக உருவாகத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் Raw Gangster படமாக வெளிவந்துள்ளது கட்டாளன். சட்டவிரோத யானைத் தந்த கடத்தலை…

பாரதிராஜாவை இயக்குகிறார் மனோஜ் பாரதிராஜா…!

Posted by - March 27, 2023 0
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில்…

நிருபர் டி.வி. செய்தியாளர் திருமண நாள் கொண்டாட்டம்

Posted by - August 18, 2026 0
நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி.யின் செய்தியாளரும் சமூக ஆர்வலருமான புலித்தேவன் – சந்திரகலா தம்பதியினர் தங்களது 30-ம் ஆண்டு திருமண நாளை இன்று (19.08.2026) மகிழ்ச்சியுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.