`லவ் டுடே’ – திரை விமர்சனம்

994 0

காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.

கோலிவுட்டில் புதுமை படைத்த `கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் `லவ் டுடே’

பிரதீப் – இவனா காதல், இவனாவின் அப்பாவான சத்யராஜுக்குத் தெரிய வருகிறது. அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், காதலர்களுக்கு முக்கிய நிபந்தனையாக இருவரும் தங்களின் செல்போனை ஒருநாள் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று புதுமையான நிபந்தனை விதிக்கிறார் சத்யராஜ்.

இந்த சோதனையில் காதலர்கள் வென்றார்களா?, அவர்களது செல்போன்களில் இருந்த ரகசியங்களால் எழுந்த சிக்கல்கள் என்ன? என்பதை அற்புதமான காதல் கதையாகச் சொல்லியிருக்கிறது ‘லவ் டுடே’.

டைரக்டரே கதாநாயகனாக களமிறங்கியதால், நேர்த்தியாக செதுக்கப்பட்ட கதையில் அப்படியே பொருந்துகிறார் பிரதீப். சிறப்பான நடிப்பை தந்துள்ளார். பாராட்டுகள்.

இதுபோல், கதாநாயகி நிகிதாவாக வரும் அழகுப் பதுமை இவானாவும் ஹீரோவுக்கு நிகராக போட்டி போட்டு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரதீப்பின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், நிகிதாவின் அப்பாவாக சத்யராஜும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற அற்புதமான தேர்வு.

யுவனின் கைவண்ணத்தில் பின்னணி இசையும் பாடல்களும் சுகமானவை. டீன்ஏஜ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் காந்தமாக ஒலிக்கிறது.

காலங்கள் மாறினாலும் மாறாத காதலை புதுமையான திரைக்கதை அமைப்பில் ஒரு சிற்பி போல் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தவகையில் லவ் டுடே, பாஸ் டுடே தான்.

Related Post

ஆக.21-ல் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ வெளியீடு

Posted by - August 18, 2026 0
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும்…

லோகா சேப்டர் ஒன் சந்திரா – சினிமா விமர்சனம்

Posted by - August 31, 2025 0
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா வேடத்தில் வருகிறார். இரவில் மட்டும் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் யார், இவரது பின்னணி என்ன என்பதே “லோகா –…

அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

Posted by - September 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்…

‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா

Posted by - September 14, 2024 0
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில்…

600 படங்களை எட்டிய கலையுலகின் முதன்மை தூதர்

Posted by - February 8, 2026 0
சினிமா உலகில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். பத்திரிகையாளர்கள் 24 மணி நேரமும் எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய எளிமை,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.