கெழப்பய – சினிமா விமர்சனம்

831 0

தாநாயகனாக 70 வயது முதியவர் கதாபாத்திரத்தை அமைத்ததற்காகவே முதலில் படக்குழுவை பாராட்டியே தீரவேண்டும். இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றியே சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் தவம் கிடக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றும் முதியவர் கதிரேசகுமார், சைக்கிளில் வீடு திரும்புகையில் கர்ப்பிணி ஒருவர் உட்பட 5 பேர் காரில் பின்னால் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வழிவிடாமல் முதியவர் செல்ல, ஒருகட்டத்தில் அவரை காரை விட்டு கீழே இறங்கிவந்து தாக்குகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து நடுசாலையில் சைக்கிளை போட்டு அந்த காரை தடுக்கிறார்.

யார் அந்த பெரியவர். அவர்களுக்கும் காரில் வருபவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதிக்கதை.

முதியவர் வேடத்தில் தயாரிப்பாளர் கதிரேச குமாரே நடித்துள்ளார். யதார்த்தமான நடிப்பில் சிறிதும் பிறழாமல் கச்சிதமாக கொடுத்திருக்கிறார். முதியவர்களை ஒதுக்கித் தள்ளும் இன்றைய அவசர உலகில், அவர்களாலும் எதுவும் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது கதிரேச குமாரின் கதாபாத்திரம்.

படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வு. அவர்களும் குறைசொல்ல முடியாத பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

அஜித்குமாரின் ஒளிப்பதிவு அருமை. கெபியின் பின்னணி இசையோ புதுமை. இவை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மறுபுறம், யாழ் குணசேகரனின் இயக்கத்தில் யதார்த்தம் மிளிர்கிறது. முதியவர்களின் நேர்மையான வாழ்க்கையை அழகாக வெள்ளித்திரையில் கொண்டு வந்துள்ளார்.

மொத்தத்தில் கெழப்பய செமப்பய…!

– நிருபர் நாராயணன்

Related Post

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’

Posted by - July 16, 2025 0
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி…

‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - June 18, 2026 0
டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’…

மாதம் 40,000 ரூபாய் EMI கட்டுகிறேன்: சின்னத்திரை நடிகை திவ்யா

Posted by - October 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

மங்கை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - February 9, 2024 0
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின்,…

செம்பி – திரை விமர்சனம்

Posted by - December 29, 2022 0
அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது. மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.