சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி

886 0

2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தேர்தலை குறிவைத்து புதிய சென்ட் அறிமுகம்சமாஜ்வாடி அத்தர்‘ என்று அழைக்கப்படும் இந்த வாசனை திரவியத்தின் அட்டைப் பெட்டியில் அகிலேஷ் யாதவ் படத்துடன், கட்சியின் சைக்கிள் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவிய பாட்டிலில் உள்ள ஆலிவ் பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் சமாஜ்வாடி கட்சியின் கொடியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

இந்த வாசனை அனைவருக்கும் சொந்தமானது. இதனை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் சோசலிச சிந்தனையுடன் மணம் வீசுவார்கள். இந்த வாசனை திரவியம் 2022-ல் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவரும். இந்த வாசனை தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும். ஆனால் பொய்யின் மூலம் மலர்ந்த மலர் ஒருபோதும் நறுமணத்தைத் தராது” என தெரிவித்தார்.

அகிலேஷ் அறிமுகப்படுத்திய சென்ட் குறித்த செய்தி டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வாசனை திரவியம் குறித்த தகவலை, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து செய்து வருகின்றனர்.

இதனிடையே, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, அனைவருக்கும் சென்ட் கொடுத்து பொதுமக்களை கவர அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்

Posted by - March 20, 2025 0
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக…

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

Posted by - December 23, 2022 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு…

படவா – சினிமா விமர்சனம்

Posted by - March 9, 2025 0
தென் கிழக்குச் சீமையான சிவகங்கை அருகேயுள்ள மரக்காத்தூர் கிராமம் விவசாயத்தில் செல்வச் செழிப்பாக திகழ்ந்த காலம் கரைந்து, காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்களின் அதீத வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து…

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

Posted by - May 10, 2023 0
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். சத்யபாமா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.