சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள திரைப்படம் ‘நூறுசாமி’. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றி மாறன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “மனிதர்களை உற்றுப் பார்த்துக் கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடியவர் சசி. இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள், சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள், நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நூறு சாமி படம் எனக்கு பிடித்திருந்தது. உதவி இயக்குநர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை சசி சாரிடம் தான் கற்றுக்கொண்டேன். பூ சசி என்ற பெயர் இனிமேல் நூறு சாமி சசி என மாறும் என நினைக்கிறேன்” என்றார்.
உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியுள்ள இப்படம் ஜூன் 19-ல் வெளியாகிறது.
