தூத்துக்குடி கதையில் “லெஜெண்ட்” சரவணன்

458 0

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார்.

ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, ‘பாகுபலி’ பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ‘லியோ’ புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய ‘கருடன்’ பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தை தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

லோகா சேப்டர் ஒன் சந்திரா – சினிமா விமர்சனம்

Posted by - August 31, 2025 0
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா வேடத்தில் வருகிறார். இரவில் மட்டும் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் யார், இவரது பின்னணி என்ன என்பதே “லோகா –…

“ஒரு தவறு செய்தால்” – சினிமா விமர்சனம்

Posted by - April 5, 2024 0
சென்னை கே.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை வைத்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு திறமையான இளைஞர் குழு பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறது. உபாசனா, பாரி, ஸ்ரீதர்,…

கண்ணை நம்பாதே – திரை விமர்சனம்

Posted by - March 17, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”. படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என…

சித்தா – சினிமா விமர்சனம்

Posted by - September 27, 2023 0
பாய்ஸ் புகழ் சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.…

ஃபேமிலி படம் – சினிமா விமர்சனம்

Posted by - December 6, 2024 0
செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், யுகே கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் இந்த குடும்பப் படம். ஆம், படத்தின் கதையை ஒரு குடும்பமாக தாங்கிப் பிடித்துள்ள படம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 11 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.