அக்யூஸ்ட் – சினிமா விமர்சனம்
நடிகர்கள் உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”. கணக்கு என்னும் குற்றவாளியைக் கொல்ல ஒரு கூலிப்படையும், மறுபுறம் அவரை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள போலீஸ் படையும் முயற்சி செய்கிறது. யார் இந்த கணக்கு, அவன் உயிர் பிழைத்தானா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. 2000-ம் ஆண்டில் வெளிவந்த, பிரபு கதாநாயகனாக நடித்த திருநெல்வேலி திரைப்படத்தில் அறிமுகமான உதயாவிற்கு, இது கோலிவுட்டில் வெள்ளி விழா ஆண்டாகும். ஆம், கால் நூற்றாண்டு காலத்தை
