அகாலி – சினிமா விமர்சனம்

495 0

காலி என்பது பஞ்சாபில் பேசப்படும் ஒரு வட்டார மொழி. இதற்கு இறப்பு என்பதே இல்லாத மனிதன் என்று அர்த்தம். அந்த தலைப்பில் வெளிவந்திருக்கும் படமும் பரபரப்பான ஒரு க்ரைம் திரில்லராக மிரட்டுகிறது.

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கான விசாரணையில் இறங்குகிறார் காவல் அதிகாரி ஜெயகுமார். அவரது விசாரணையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன. சுடுகாடு, சாத்தான், நரபலி என்று சும்மா மிரட்டியிருக்கிறார்கள்.

சாத்தானை வழிபடும் குழுவினர், சுடுகாட்டில் விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் காவல் அதிகாரி கண்டுபிடிக்கிறார். இதுதொடர்பான பல மர்ம முடிச்சுகளை அவர் எப்படி துப்பு துலக்குகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

படத்தில் பாதிரியராக நடித்துள்ள நாசர் படத்திற்கு பலமாக திகழ்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயகுமார், தலைவாசல் விஜய், யாமினி, தாரணி ஆகியோரும் தங்கள் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு ஒரு ப்ளஸ் என்றே கூறலாம். கிரி முர்பியின் கேமரா கோணங்களில் ஒவ்வொரு பிரேமும் நகர்வும் அற்புதம். புதுப்புது லொகேஷன்கள் இதுவரை நாம் காணாதவையாக உள்ளன.

அனிஷ்மோகனின் பின்னணி இசை பரவாயில்லை.

படத்தை முகமது ஆஷிப் ஹமீது இயக்கியிருக்கிறார். சாத்தான்களை வழிபடும் குழுக்களின் ரகசியங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவுக்கு இது புதிது என்றாலும், இவ்வளவு உழைப்பில் வேறொரு எளிமையான கதையை வழங்கியிருக்கலாம் என தோன்றுகிறது.

– நிருபர் நாராயணன்

Related Post

டார்க் – சினிமா விமர்சனம்

Posted by - July 3, 2026 0
ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு,…

அநீதி – திரை விமர்சனம்

Posted by - July 22, 2023 0
சென்னையில் ‘மீல் மங்கி’ என்னும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார் கதாநாயகன் அர்ஜுன் தாஸ். அந்தப் பணியில் தினசரி அவர் சந்திக்கும் அவமானங்களும், அதனால் ஏற்படும்…

ஜிகிரி தோஸ்த் – சினிமா விமர்சனம்

Posted by - December 25, 2023 0
காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின்…

லோகா சேப்டர் ஒன் சந்திரா – சினிமா விமர்சனம்

Posted by - August 31, 2025 0
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சந்திரா வேடத்தில் வருகிறார். இரவில் மட்டும் பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் இவர் யார், இவரது பின்னணி என்ன என்பதே “லோகா –…

ஆக.21-ல் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ வெளியீடு

Posted by - August 18, 2026 0
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.