“பவுடர்” டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - October 2, 2022

தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் “பவுடர்”. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் நிகில் முருகன் பேசியதாவது: எனது திரையுலக வெற்றிக்கு பக்கபலமாக உள்ள எனது தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சினிமா துறையில் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பல ஆண்டுகளாக திரையுலகிலேயே பயணித்தாலும் நடிப்பது இதுவே முதல்முறை.

“பபூன்” – திரை விமர்சனம்

Posted by - September 24, 2022

ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”. கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க நாயகன் குமரனும் நண்பன் முத்தையாவும் திட்டமிடுகின்றனர். ஆனால் அதற்கு பணம் இல்லாத நிலையில் தற்காலிகமாக லாரி ஓட்டும் பணிக்கு செல்கின்றனர். அவர்கள் கொண்டு செல்வது போதைப்பொருள் என்பது அவர்களுக்கு தெரியாத சூழலில் போலீசாரிடம் சிக்குகின்றனர். அதன் பிறகு அவர்களின் நிலை என்ன? தங்களின் லட்சியத்தை

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022

“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர், தொடர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் சிராஜுதீன் என்பவர், ஜெஸிகாவுக்கு படவாய்ப்பு தருவதாகவும், காதலிப்பதாகவும் கூறி நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 18-ம் தேதி பவுலின் ஜெஸிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, தமிழ் திரையுலகில் பெரும்

பீஸ்ட் – திரைப்பட விமர்சனம்

Posted by - April 14, 2022

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள படம் பீஸ்ட். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே இயக்குநர் நெல்சன் கைதட்டல்களை அள்ளுகிறார். ரா உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய விஜய் சூழ்நிலையால் வேலையை விட்டு விட்டு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தான் பணியாற்றும் நிறுவனம் சார்பில் விஜய் ஒரு வணிக வளாகத்திற்கு பணியாற்றச் செல்லும் போது, அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடிக்கிறார்கள். தீவிரவாதி

ரஜினியின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு

Posted by - February 11, 2022

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-வது படத்தை, விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்குகிறார்.  ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் கேங் ஸ்டாராக ரஜினி நடிக்கிறார். “காலா” படத்தின் “மரண மாஸ்” பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.