துணிவு – திரை விமர்சனம்

815 0

ங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

வெள்ளை தாடியில் அஜித்தின் அழகு மேலும் கூடியிருக்கிறது. காட்சிக்கு காட்சி ஆக்சன் தான். ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அரங்கை அதிர வைக்கின்றன. ஜாலி நடனம், வில்லன் சிரிப்பு, நிதானமான வசனம், போலீசுக்கு தண்ணி காட்டுவது என சகலத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் அஜித்.

கதாநாயகி கேரளத்து அழகுக்கிளி மஞ்சு வாரியர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்திருக்கிறார். சண்டை காட்சிகளிலும் லேடி அஜித்தாக அசத்துகிறார்.

போலீஸ் கமிஷனர் வேடத்தில் வழக்கம் குறை சொல்லமுடியாத யதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. வில்லன் ஜான் கொக்கேன் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார். இதுபோல், மோகன சுந்தரம் நிருபர் வேடத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் ‘சில்லா சில்லா’ பாடலுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. பின்னணி இசையிலும் மாஸ் காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் கேமரா கோணங்கள் மிரட்டலானவை, அற்புதமான காட்சிப் படைப்பு.

அப்பாவி மக்களின் பணம் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் ஏமாற்றுகிறார்கள் என்பதை ஒரு விழிப்புணர்வு மெசேஜாகவும் படத்தில் வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் வினோத்துக்கு இனி ஏறுமுகம் தான் என்று துணிவுடன் கூறலாம்.

மொத்தத்தில் தல ரசிகர்களுக்கு துணிவு ஒரு சர்க்கரைப் பொங்கல்.

– நிருபர் நாராயணன்

 

Related Post

பிரசாந்த் படத்தின் பாடலை வெளியிட்டார் விஜய்

Posted by - July 27, 2024 0
பிரசாந்த் நடித்திருக்கும் “அந்தகன்” திரைப்படத்தின் அறிமுகப் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். இதுதொடர்பான வீடியோ படத்தின் அறிமுக விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்விழாவில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் ஊர்வசி,…

டென் ஹவர்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - April 20, 2025 0
இரவு நேர ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற தொலைபேசியும், மகளை காணவில்லை என்ற புகாரும் குறித்து விசாரிக்க களமிறங்குகிறார் கட்டுமஸ்தான கதாநாயகன் சிபிராஜ். சேலம்…

விஜய் ஆண்டனியின் 25வது படம் “சக்தி திருமகன்”

Posted by - February 1, 2025 0
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக…

ராங்கி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 31, 2022 0
லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ராங்கி. இப்படத்தில் த்ரிஷா ஒரு பத்திரிகையாளராக சூப்பராக நடித்துள்ளார் என்று தாராளமாக பாராட்டலாம். 40…

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.