கேப்டன் விஜயகாந்த் காலமானார்

709 0

டிகர், அரசியல்வாதி, கல்வியாளர் என்ற வரிசையில் நல்ல மனிதராக மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71.

மதுரை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயகாந்த் சினிமா மீது தீராக்காதல் கொண்டவர். ஆரம்பத்தில் தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் சூபர்வைசராக பணியாற்றினார்.

1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தீவிரப்பற்றுக் கொண்ட விஜயகாந்த் அவரது பெயரை தனது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

மேலும், 1991-ம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் திரைப்படம் அவரது 100-வது படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. இந்த படம் தான் விஜயகாந்துக்கு கேப்டன் என்னும் அடைமொழியை தந்தது.

தமிழ் சினிமாில் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திறமையாக செயல்பட்டு சங்கத்தின் கடனையும் அடைக்கச் செய்தார்.

கடந்த 2005-ல் தேமுதிக என்னும் கட்சியை தொடங்கிய அவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.

2020-ல் கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போது, அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில், இச்செய்தியை அறிந்த கேப்டன் விஜயகாந்த், கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்ய தனது ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொள்ளலாம் என நிலத்தை தர முன்வந்தார்.

இப்படி சினிமா, அரசியல் மட்டுமின்றி வள்ளல் மனம் படைத்தவராகவும் விளங்கிய விஜயகாந்தின் மறைவால் அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Post

நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

Posted by - August 22, 2022 0
சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான…

டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

Posted by - October 13, 2022 0
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற…

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

Posted by - February 24, 2022 0
புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின்…

திருவேற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்

Posted by - September 5, 2026 0
சென்னை திருவேற்காடு யாதவ நல சங்கம் சார்பில், சிவன் கோயில் அருகே 4-ம் ஆண்டாக உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவர்கள் மற்றும்…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Posted by - January 18, 2024 0
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மிகச்சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆநிரைகளை வைத்தே தனது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.