டீன்ஸ் – சினிமா விமர்சனம்

490 0

ள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு சிறுவனையும் அழைத்துக் கொண்டு 13 பேராக செல்கின்றனர். ஒரு போராட்டத்தால் போக்குவரத்து முடங்கிவிட, காட்டு வழியே பயணத்தை தொடர்கின்றனர். அப்போது ஒவ்வொருவராக காணாமல் போக, திகிலுடன் மற்ற சிறுவர்கள் அவர்களை தேடுகின்றனர்.

காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது, மாணவர்கள் ஊர் திரும்பினார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் டைட்டில் கார்டு தொடங்கும் இடத்திலேயே அப்படியே நாமும் படத்திற்குள் பயணமாகிறோம். கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு குறையவில்லை.

படத்தில் நடித்துள்ள டீன்ஸ் அனைவருமே யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். யோகிபாபும் கொடுத்த வேலையை செய்துவிட்டு சில சீன்களுடன் விடைபெற்றுக் கொள்கிறார்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை சற்றே ஞாபகப்படுத்தினாலும், இங்கே புதுமைப்பித்தன் பார்த்திபனின் இயக்கத்தில் சுவாரஸ்யம் அதிகம். படத்திலும் சில காட்சிகளில் வருகிறார்.

இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.

இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களையும் மக்கள் ஆதரித்தால் தான், சினிமா என்னும் மாபெரும் கலை அவ்வப்போது தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொள்ளும்.

அரைத்த மாவை அரைக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில், புதிய பாதையில் பயணித்திருக்கிறார் பார்த்திபன். ஸ்பெஷல் கிளாப்ஸ்.

– நிருபர் நாராயணன்

Related Post

டென் ஹவர்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - April 20, 2025 0
இரவு நேர ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற தொலைபேசியும், மகளை காணவில்லை என்ற புகாரும் குறித்து விசாரிக்க களமிறங்குகிறார் கட்டுமஸ்தான கதாநாயகன் சிபிராஜ். சேலம்…

விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Posted by - November 19, 2025 0
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24…

கண்ணை நம்பாதே – திரை விமர்சனம்

Posted by - March 17, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”. படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என…

“கட்ஸ்” இசை வெளியீட்டு விழா

Posted by - April 9, 2025 0
புதுமுக நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் கட்ஸ். சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாரயணன் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் கால்…

நூறு சாமி – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2026 0
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது நூறு சாமி. கணவனை இழந்த சுவாசிகா, தனது மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தி இருவரையும் தனியொரு பெண்ணாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.