அக்யூஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - July 31, 2025

நடிகர்கள் உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”. கணக்கு என்னும் குற்றவாளியைக் கொல்ல ஒரு கூலிப்படையும், மறுபுறம் அவரை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள போலீஸ் படையும் முயற்சி செய்கிறது. யார் இந்த கணக்கு, அவன் உயிர் பிழைத்தானா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. 2000-ம் ஆண்டில் வெளிவந்த, பிரபு கதாநாயகனாக நடித்த திருநெல்வேலி திரைப்படத்தில் அறிமுகமான உதயாவிற்கு, இது கோலிவுட்டில் வெள்ளி விழா ஆண்டாகும். ஆம், கால் நூற்றாண்டு காலத்தை

தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்

Posted by - July 28, 2025

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி. மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் பத்தாம் வகுப்பில் பெயில் ஆன ஆகாச வீரனுக்கும் (விஜய் சேதுபதி) – எம்.ஏ. படித்த பேரரசிக்கும் (நித்யா மேனன்) காதல் திருமணம் ஆகிறது. மகிழ்ச்சியாக போகும் இவர்களின் வாழ்க்கையில் இருவரது அம்மாக்களும் தலையிட, தம்பதி வாழ்க்கையில் புயல் வீசுகிறது. பிரச்னை பெரிதாகி விவாகரத்து கோரும் அளவுக்கு செல்கிறது. இறுதியில் அவர்கள் வாழ்க்கைப் பயணம்

டீன்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - July 17, 2024

பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு சிறுவனையும் அழைத்துக் கொண்டு 13 பேராக செல்கின்றனர். ஒரு போராட்டத்தால் போக்குவரத்து முடங்கிவிட, காட்டு வழியே பயணத்தை தொடர்கின்றனர். அப்போது ஒவ்வொருவராக காணாமல் போக, திகிலுடன் மற்ற சிறுவர்கள் அவர்களை தேடுகின்றனர். காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது, மாணவர்கள் ஊர் திரும்பினார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை. படத்தின்

கான்ஜுரிங் கண்ணப்பன் – சினிமா விமர்சனம்

Posted by - December 10, 2023

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். இப்படத்தின் மூலம் செல்வின் ராஜ் சேவியர் கோலிவுட்டில் புதிய இயக்குநராக களமிறங்கியுள்ளார். ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கதாநாயகன் சதீஷ் ஒரு நாள் தெரியாமல் ட்ரீம் கேட்ச்சர் எனப்படும் சூனியம் செய்து வைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து அதில் இறக்கை ஒன்றை பிய்த்து விடுகிறார். இதனால் அவர் தூங்கும்போது கனவில் பாழடைந்த அரண்மனைக்குள்

ஷாட் பூட் த்ரீ – சினிமா விமர்சனம்

Posted by - October 4, 2023

அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ. வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உயர் நடுத்தர குடும்பமான சாமிநாதன், ஷியாமளா தம்பதி அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். அவர்களது மகன் கைலாஷ் ஆசையாக ஒரு நாய் வளர்த்து வருகிறான். ஒருநாள் திடீரென நாய் காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லப்பிராணியை தேடுகிறான் சிறுவன் கைலாஷ். ஆனால், நாயை கொல்ல மாநகராட்சி ஊழியர்கள் திட்டமிடுகின்றனர். நாய் காப்பாற்றப்பட்டதா?

பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

Posted by - September 2, 2023

அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”. நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு இப்படம் வெளிவந்துளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் வில்லனாக நடித்த அமிதாஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தங்கையின் மருத்துவ செலவுக்காக அமிதாஷ் சிறு சிறு திருட்டில் ஈடுபட, அவரை தனக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார் இன்ஸ்பெக்டர் சரத்குமார். ஆயிரம் ஆண்டு பழமையான சிலையை திருடி அதை 12 கோடி

இன்பினிட்டி – திரை விமர்சனம்

Posted by - July 8, 2023

நகரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, படத்தின் தலைப்புக்கு ஏற்ப முடிவற்ற தன்மையாக தொடர்ந்து சில விஐபிகளும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க வரும் சிபிஐ அதிகாரியாக இயக்குநர் நட்ராஜ் நடித்துள்ளார். எப்போதும் மாறுபட்ட படங்களில், கேரக்டர்களில் நடித்து பட்டையைக் கிளப்பும் நட்ராஜ் இந்த படத்திலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் நட்ராஜ் தடுமாறுகிறார். அதேநேரத்தில் மருத்துவர் வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். இதையடுத்து

பம்பர் – திரை விமர்சனம்

Posted by - July 5, 2023

நடிகர் வெற்றி, பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பம்பர்”. ஜாலி பேர்வழியான கதாநாயகன் சபரிமலை செல்லும் நிலையில், 10 கோடி பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், அதை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விடும் சூழலில், அதே சீட்டுக்கு பம்பர் பரிசு விழுகிறது. ஒருவழியாக அந்த லாட்டரியும் அவருக்கு வந்து சேர, அதை வைத்து தான் காதலிக்கும் மாமன் மகளை கைப்பிடித்தாரா, ஏழ்மையில் இருந்து மீண்டாரா என்பது

“யாத்திசை” – திரை விமர்சனம்

Posted by - April 22, 2023

மன்னர் கால படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுத்து அசத்தியுள்ளது யாத்திசை படக்குழு. கதை ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. வெல்ல முடியாத சோழர்களை போரில் வீழ்த்தி மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு. தோல்வியால் சோழர் படை காட்டுக்குள் பதுங்கி வாழ்கிறார்கள். பாலை நிலத்தை சேர்ந்த எயினர்களின் மன்னரான கொதி, சோழர்களின் துணையுடன் ரணதீரனுக்கு எதிராக களமிறங்க திட்டமிடுகிறான். அதற்குள் பெரும்படையுடன் கோட்டையை நெருங்குகிறது ரணதீரனின் போர்ப்படை. யார் வென்றார்கள், அதற்கான முயற்சிகள் என்ன

கண்ணை நம்பாதே – திரை விமர்சனம்

Posted by - March 17, 2023

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”. படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என பல பரிமாணங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார், நமது விளையாட்டுத்துறை அமைச்சர். இதுபோன்ற மாறுபட்ட படங்களை உங்களிடம் இருந்து அதிகளவில் உங்கள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவர்களை ஏமாற்றிவிடாதீர்கள்… ப்ளீஸ்…! வீட்டு உரிமையாளரின் மகளை காதலிக்கும் உதயநிதியை, கோபத்தில் வீட்டை காலி செய்யுமாறு கூறுகிறார் அவரது தந்தை. இந்நிலையில், நண்பருடன் இணைந்து

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.