இன்று ரத சப்தமி (சூரிய ஜெயந்தி)

491 0

லகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான்.

சூரிய ஜெயந்தி தினமே ரத சப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரிய பகவான் தனது ரதத்தின் வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குவது, இந்த சப்தமி திதியில் இருந்துதான் தொடங்குகிறார். இதன் மூலம் ஒளிக்கதிர்களுக்கு சூரியபகவான் வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ரதசப்தமி நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதால், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு. ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே.

தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால், ரதசப்தமி நாளில் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும்.

கண்கண்ட தெய்வமான சூரியனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா” என்று சொல்லி வணங்கலாம். சூரியனை வழிபடுவோர் வாழ்வில் இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது உறுதி.

 

Related Post

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…
tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devotees

திருப்பதி கோயிலில் இனி நேரடி இலவச தரிசன டிக்கெட்…

Posted by - February 5, 2022 0
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம்…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா

Posted by - November 9, 2021 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில், கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டும்…

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

two − 2 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.