லெவன் – சினிமா விமர்சனம்

225 0

யக்குனர் லோகேஷ் அஜ்லஸ் இயக்கத்தில் பிரபல தெலங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிச்சிருக்கும் படம் தான் லெவன்.

ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்தன் வேடத்தில் வரும் நாயகன் நவீன் நேர்மையாக கடமையாற்றி வருகிறார். நகரில் தொடர்ந்து மர்மமான முறையில் நடக்கும் கொலைகள் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்த, துப்புதுலக்க களமிறங்குகிறார் அரவிந்தன் ஐபிஎஸ்.

இந்த தொடர் கொலையில் ஈடுபடுவது யார்? அந்த மர்மம் தான் என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

எரிந்த நிலையில் கிடைக்கும் சடலத்துடன் தொடங்கும் கதைக்களமும், அரவிந்தனின் புலனாய்வு முயற்சிகளும், செம விறுவிறுப்பு. அவரது கம்பீரமான தோற்றமும் உடல்மொழியும் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

ரேயா ஹரி, ஷஷாங், ரித்விகா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகாக நடித்து மெருகேற்றியுள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் நடிகை அபிராமி.

டி இமானின் இசையில், விடியாத வானம் என்ற பாடல் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.

பின்னணி இசையில் இதுவரை கண்டிராத ஒரு புதுமையை படைத்திருக்கிறார் இமான். அவரது இசையும் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பிளஸ் என்றே கூறலாம்.

சீரியல் கில்லிங் புலனாய்வு திரைக்கதையை காட்சிக்கு காட்சிக்கு மிகச் சிறப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் லோகேஷ் அஜ்லஸ். வித்தியாசமான திரில்லர் படம்.

மொத்தத்தில் லெவன் கோடை வெயிலுக்கு ஏற்ற லெமன்.

– நிருபர் நாராயணன்

Related Post

கிறிஸ்டினா கதிர்வேலன் – சினிமா விமர்சனம்

Posted by - November 10, 2025 0
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு,…

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025 0
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா…

“டக்கர்” – திரை விமர்சனம்

Posted by - June 10, 2023 0
நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”. பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு…

“ஒரு தவறு செய்தால்” – சினிமா விமர்சனம்

Posted by - April 5, 2024 0
சென்னை கே.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை வைத்து சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு திறமையான இளைஞர் குழு பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறது. உபாசனா, பாரி, ஸ்ரீதர்,…

டீன்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - July 17, 2024 0
பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.