2004-ம் ஆண்டு வெளியான சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தீபாவளி போன்று கொண்டாடப்பட்டது.
`ஞாபகம் வருதே’ என்ற அருமையான பாடல், சேரன் – சினேகா நட்பு, கோபிகாவுடன் காதல் முறிவு என யதார்த்தமான கதைக்களம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பேசப்பட்ட இந்த படம், 3 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது.
கோலிவுட்டில் தற்போது ரீ ரிலீஸ் காலம் டிரெண்டாக உள்ள நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராப்பும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, வரும் 14-ம் தேதி தியேட்டர்களில் மீண்டும் வெளியாகிறது.
இதையொட்டி, அதன் புதிய டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
– நிருபர் நாராயணன்
