ஜாக்கி – சினிமா விமர்சனம்

130 0

டாக்டர் பிரகாபல் இயக்கத்தில் பிகே 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜாக்கி.

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதுரை மண்ணில் நடைபெறும் கிடா சண்டையை மையமாக வைத்து கதை சுழல்கிறது.

ஆட்டோ ஓட்டுநராக வரும் நாயகன் யுவன் கிருஷ்ணாவுக்கு, வில்லன் ரிதன் கிருஷ்ணாவுக்கும் இடையே நடக்கும் கிடா மோதலில் யார் வென்றார்கள், யாருக்கு ஜாக்கி பரிசு கிடைத்தது என்பதே படத்தின் சுருக்கமான கதை.

யுவன் அற்புதமாக நடித்திருக்கிறார். கதாநாயகி அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளில் மட்டுமின்றி சண்டை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். அம்மு அபிராமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் சும்மா மிரட்டியிருக்கிறார் ரிதன். இனி இவர் கதாநாயகனாகவும் களமிறங்கலாம.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. என்.எஸ்.உதயகுமார் கதை களத்திற்கு ஏற்ப அற்புதமாக கேமராவை கையாண்டு இருக்கிறார்.

பாரதிராஜா பாணியில், மதுரை மண்ணின் வாழ்வியலை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரகாபல். கிடா சண்டையை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம். வீரம் நிறைந்த கிடாக்களும் படத்தின் ஹீரோக்கள் என்று கூறும் வகையில் கதைக்கு அடித்தளமாக உள்ளன.

குளிருக்கு இதமாக, விறுவிறுப்பான இந்த ஜாக்கி திரைப்படத்தை தியேட்டரில் ஜாலியாக கண்டு ரசிக்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

‘இந்தியன் பீனல் லா’ – இசை வெளியீட்டு விழா

Posted by - November 12, 2025 0
IPL “இந்தியன் பீனல் லா” திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. IPL படத்தில் கிஷோர், பைக் ரேசர் TTF வாசன், குஷிதா,…

‘படையாண்ட மாவீரா’ படக் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு

Posted by - September 10, 2025 0
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’…

ஆழி – சினிமா விமர்சனம்

Posted by - March 4, 2026 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் ஆழ்கடலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் “ஆழி”. நாகர்கோவிலைச் சேர்ந்த படகு மெக்கானிக்காக வரும் சரத்குமார், சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல்…

‘அக்யூஸ்ட்’ திரைப்பட பிரஸ்மீட்டில் நடிகர் உதயா உருக்கமான பேச்சு

Posted by - July 20, 2025 0
நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள…

லாந்தர் – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2024 0
கோவையில் ஒருநாள் இரவு… கருப்பு ரெயின்கோட் அணிந்த மர்ம மனிதர், சாலையில் காண்பவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, காவல்துறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.