குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025

கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் படம் தயாரித்து இயக்க முடிவு செய்கிறார். அதே வீட்டில் ஒரு அறையில் வசித்து வரும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக ஆர்வலருமான வரதராஜன் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை குமரன் மீது விழுகிறது. உண்மையான குற்றவாளி சிக்கினாரா, குமரன் தப்பினாரா, ஆசைப்படி சினிமா டைரக்டர்

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025

கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில், பிரம்மாண்டமாக நடைபெறும். பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது, செய்தியாளர் சந்திப்பு, உபசரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரஸ் ரிலீஸ் தயாரித்தல், நிகழ்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான ஏற்பாடுகள், நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுதல் என பல்வேறு கட்டப் பணிகளை உள்ளடக்கியது திரையுலகின் PRO

‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Posted by - August 7, 2025

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். ‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி.

அக்யூஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - July 31, 2025

நடிகர்கள் உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”. கணக்கு என்னும் குற்றவாளியைக் கொல்ல ஒரு கூலிப்படையும், மறுபுறம் அவரை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள போலீஸ் படையும் முயற்சி செய்கிறது. யார் இந்த கணக்கு, அவன் உயிர் பிழைத்தானா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. 2000-ம் ஆண்டில் வெளிவந்த, பிரபு கதாநாயகனாக நடித்த திருநெல்வேலி திரைப்படத்தில் அறிமுகமான உதயாவிற்கு, இது கோலிவுட்டில் வெள்ளி விழா ஆண்டாகும். ஆம், கால் நூற்றாண்டு காலத்தை

“கட்ஸ்” இசை வெளியீட்டு விழா

Posted by - April 9, 2025

புதுமுக நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் கட்ஸ். சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாரயணன் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, இயக்குநர் சிவானி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகை ஸ்ருதி நாராயணன், “கட்ஸ் படத்தில்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “அயலான்” இசை வெளியீடு

Posted by - December 30, 2023

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி

ஜிகிரி தோஸ்த் – சினிமா விமர்சனம்

Posted by - December 25, 2023

காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின் இயக்குநர் வி.அரண், வி.ஜே.ஆஷிக் ஆகியோர் நண்பர்களாக நடித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் அரண் உருவாக்கிய தொலைபேசி ஒட்டுகேட்புக்கான கருவி மூலம், சுமார் 500 மீட்டர் சுற்றளவில் நடக்கும் கைபேசி உரையாடல்களை கேட்க முடியும். ஆனால், தனது கல்லூரியில் பேராசிரியர்கள் முன்பு அதை விளக்கி டெமோ காட்டும்போது தோற்றுவிடுகிறார். இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.