ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

957 0

வடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களை வரவேற்று பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. சாலமன் பேசினார்.

இதையடுத்து மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும், உதவி தலைமை ஆசிரியரும் எடுத்துரைத்தனர். பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியை காவல்துறை உதவி ஆணையர் திரு புருஷோத்தமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மாணவர்களின் இந்த பிரச்சாரப் பேரணி, டிஎன்எச்பி ரோடு வழியாக மீண்டும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

காவல்துறை அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அயப்பாக்கம் பகுதி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

–  ஆர். நாராயணன்

 

Related Post

அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

Posted by - September 6, 2023 0
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து…

முருக பக்தர்களை வதம் செய்யும் கோயில் இணை ஆணையர்…!

Posted by - March 24, 2024 0
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிஞ்சி நில வேந்தரான தமிழ்க் கடவுள் இங்கே புன்சிரிப்புடன் நெய்தல் நிலத்தில்…

இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!

Posted by - November 16, 2022 0
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில்…

ஓலைப்பெட்டியில் இனி திருப்பதி லட்டு…!

Posted by - February 25, 2023 0
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வதற்காக இனி ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023 0
சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.