முதலிடத்தில் நடிகை ஜான்வி கபூரின் “மிலி” திரைப்படம்

752 0

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும் கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.

‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க் காமெடி, ‘ரூஹி’- ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’- பயோகிராஃபிகல் ட்ராமா மற்றும் ‘மிலி’- சர்வவைல் ட்ராமா என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தங்களின் கடின உழைப்பு மற்றும் கொடுத்த முயற்சிகள் அனைத்தும் படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருகிறது என்பதைக் கண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

Related Post

“அக்யூஸ்ட்” இசை வெளியீட்டு விழா

Posted by - June 1, 2025 0
நடிகர் உதயா திரையலகிற்கு வந்து 25-வது ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் நடித்துள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”. அஜ்மல், யோகிபாபு உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை…

ஒத்த ஓட்டு முத்தையா – சினிமா விமர்சனம்

Posted by - February 16, 2025 0
‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு…

`லவ் டுடே’ – திரை விமர்சனம்

Posted by - November 5, 2022 0
காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். கோலிவுட்டில்…

தலைவன் தலைவி – சினிமா விமர்சனம்

Posted by - July 28, 2025 0
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி. மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் பத்தாம் வகுப்பில் பெயில்…

‘இந்தியன் பீனல் லா’ – இசை வெளியீட்டு விழா

Posted by - November 12, 2025 0
IPL “இந்தியன் பீனல் லா” திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. IPL படத்தில் கிஷோர், பைக் ரேசர் TTF வாசன், குஷிதா,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

10 + fourteen =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.